விவசாயிகள் தவிப்பு : நெல் கொட்ட இடமில்லை
- 2025-03-19 11:04:34
மதுரை கிழக்கு களிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நெல் கொள்முதல் மையத்தில் நெல் கொட்ட இடமில்லாமல் அறுவடை பணியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
மதுரை கிழக்கில் களிமங்கலம், ஓவலுார், களிமங்கலம் ஓடைப்பட்டி, மீனாட்சிபுரம் புதுார், அன்னஞ்சியூர் பகுதிகளில் 800 ஏக்கரில் நெல் விவசாயம் ஏற்படுகிறது. மைய வளாகம் முழுவதும் நெல் மூடைகளும் காயவைக்கப்பட்ட நெல்லும் குவிந்து கிடப்பதால் மற்ற விவசாயிகளின் நெல் மூடைகளை கொண்டு வரமுடியவில்லை. லாரிகளும் உள்ளே வரமுடியவில்லை.
இப்பகுதியில் இன்னமும் 80 ஏக்கரில் நெல் அறுவடைக்கு தயாராக உள்ளது. இடமில்லாததால் அறுவடை செய்யாமல் உள்ளனர்.