Namma Madurai App

Namma Madurai App

எஸ்.ஜி.எப்.ஐ, விளையாட்டில் தமிழகம் சாதனை
Back SPORTS NEWS
SPORTS NEWS

எஸ்.ஜி.எப்.ஐ, விளையாட்டில் தமிழகம் சாதனை

52 days ago 03 Feb 2026

Share this story

மதுரை: தேசிய பள்ளிகள் விளையாட்டு குழுமம் (எஸ்.ஜி.எப்.ஐ.) நடத்தும் தேசிய அளவிலான ஸ்வாஷ், ரைபிள் சூட்டிங் போட்டிகளில் தமிழக அணியினர் பதக்கங்களை குவித்துள்ளனர்.

2025-26க்கான எஸ்.ஜி.எப்.ஐ.யின் தேசிய அளவிலான 39 வகையான தனிநபர், குழு விளையாட்டுப் போட்டிகள் 2025 அக்டோபரில் துவங்கி 2026 ஏப்ரல் வரை நடக்கிறது.

ரைபிள் சூட்டிங், டேக்வாண்டோ, ஸ்குவாஷ் 14 வயது, 17, 19 வயது ஆடவர், மகளிர் பிரிவு. 14 வயது ஆடவர் கால்பந்து போட்டிக்கான தமிழக அணித்தேர்வு மதுரையில் நடந்தது. இதில் தேர்வான வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் நடந்த ரைபிள் சூட்டிங் 14 வயது மகளிர் குழுப்பிரிவில் திண்டுக்கல் தனுஸ்ரீ, ஹரிஷா வெள்ளிப்பதக்கம், மதுரை ஜாகிதுவாரகா குழுப்பிரிவில் வெள்ளி, தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
மத்திய பிரதேசத்தில் நடந்த சூட்டிங் போட்டிக் கானா7 வயது ஆடவர் குழுப்பிரிவில் சேலம் கமலேஸ்வர், நாமக்கல் விஷ்ணுப்ரியன், மதுரை க்ரிசிவ் வெள்ளிப்பதக்கம் வென்றனர். 17 வயது மகளிர் குழுப்பிரிவில் மதுரை உமையாழினி திருப்பூர் அஸ்வனா குழுப்பிரிவில் தங்கம், மதுரை திவ்யா தனிநபர், குழுப் பிரிவில் தங்கம் வென்றனர்.

ஆடவர் சூட்டிங் போட்டி 19 வயது குழுப்பிரிவில் கோவை இமானுவேல், மதுரை ஹரிஹரன், மதுரை தானத்தேவன் தங்கப்பதக்கமும், மகளிர் பிரிவில் மதுரையைச் சேர்ந்த தனேஷியா பான்டினஸ், தனுஸ்ரீ, ஸ்வாதிகா ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

மகளிர் ஸ்குவாஷ் 19 வயது குழுப்பிரிவில் சேலம் பிரியதர்ஷினி, கோவை ஹர்ஷினி ஸ்ரீ மதுரை ரித்விகா ஸ்ரீ, தூத்துக்குடி ரியா ருக்ஷனா, கோவை அனன்யா ஆகியோர் தங்கப் பதக்கமும் தனிநபர் பிரிவில் அனன்யா வெண்கலப்பதக்கம் வென்றார்.

ஸ்குவாஷ் ஆடவர் 19 வயது குழுப்பிரிவில் துாத்துக்குடி ஜோயல் தினகரன், சென்னை நரேஷ் ஹரிஹரன், சேலம் பிரசன்ன தர்ஷன், திருச்சி தினேஷ்குமார், துாத்துக்குடி லட்சுமணஹரி வெள்ளிப்பதக்கமும் தனிநபர் பிரிவில் லட்சுமணஹரி வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் 7 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர். தமிழக அணியினர் 200 பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.

Namma Madurai

Local News & Updates

More News