Namma Madurai App

Namma Madurai App

துாய்மைப் பணியாளருக்கு காலை உணவு துவக்கம்
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

துாய்மைப் பணியாளருக்கு காலை உணவு துவக்கம்

44 days ago 10 Feb 2026

Share this story

வாடிப்பட்டி துாய்மைப் பணியாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் காலை உணவுத்திட்டத்தை காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். அனைத்து நகராட்சி, பேரூராட்சிகளில் திட்டம் துவக்கப்பட்டது.
பரவை பேரூராட்சியில் கலெக்டர் பிரவீன் குமார் துவக்கி வைத்தார். பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கணேசன், செயல் அலுவலர் ஜூலான் பானு முன்னிலை வகித்தனர். தி.மு.க,மாநில பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், செயலாளர் ராஜாமணி, வார்டு கவுன்சிலர்கள் நாகேஸ்வரி பங்கேற்றனர்.
வாடிப்பட்டியில் பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் துவக்கி வைத்தார். செயல் அலுவலர் ஜெயலட்சுமி, துணைத் தலைவர் கார்த்திக் உட்பட பலர் பங்கேற்றனர். மேற்பார்வையாளர் சுரேஷ் நன்றி கூறினார்.
உசிலம்பட்டி நகராட்சியில் துணைத் தலைவர் தேன்மொழி தலைமை வகித்தார். கமிஷனர் இளவரசன், தி.மு.க., நகர செயலாளர் தங்கபாண்டியன், ஒன்றிய செயலாளர் அஜீத்பாண்டி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

திருமங்கலத்தில் நகராட்சித் தலைவர் ரம்யா துவக்கி வைத்தார். சுகாதார அலுவலர்கள் செங்கதிர் செல்வன், செபஸ்டியான், சிக்கந்தர், கவுன்சிலர்கள் சின்னச்சாமி, திருக்குமார், வீரக்குமார், அமுதா பங்கேற்றனர்.

சோழவந்தான் பேரூராட்சியில், தலைவர் ஜெயராமன் துவக்கி வைத்தார். செயல் அலுவலர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள் சத்யபிரகாஷ், குருசாமி, செல்வராணி, சுகாதார ஆய்வாளர் ஜெஸ்ஸி உட்பட பலர் பங்கேற்றனர்.

Namma Madurai

Local News & Updates

More News