Back
LOCAL EVENTS
LOCAL EVENTS
பண்ணை பள்ளி பயிற்சி: நவீன வேளாண் நுட்பங்கள் விவசாயிகளுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டன!
147 days ago
01 Nov 2025
கொட்டாம்பட்டி: ஏடிமங்கலத்தில், கொட்டாம்பட்டி வேளாண் துறையின் ஏற்பாட்டில் விவசாயிகளுக்கான பண்ணை பள்ளி பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் மதுரை துணை வேளாண் இயக்குநர் ராணி தலைமை வகித்தார். நெற்பயிர் சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை, உர மற்றும் நுண்ணூட்ட சத்து மேலாண்மை, விதைத் தயாரிப்பு முறைகள் பற்றிய பயிற்சியை அவர் வழங்கினார்.
உதவி இயக்குநர் சுபாஷ்சாந்தி, பயிர் காப்பீட்டு திட்டம் மற்றும் விவசாயிகளுக்கான அடையாள எண் பதிவு முறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
இம்முகாமில் துணை மற்றும் உதவி வேளாண் அலுவலர்கள் ரகுராமன், பாலசுப்பிரமணியன், தொழில்நுட்ப மேலாளர் ராஜதுரை, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் கண்ணன், சத்தியகீர்த்தனா, பயிர் அறுவடை சோதனை அலுவலர் சேதுபதி உள்ளிட்டோர் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

Namma Madurai
Local News & Updates