Namma Madurai App

Namma Madurai App

ஓப்பன் சிலம்பப் போட்டி
Back SPORTS NEWS
SPORTS NEWS

ஓப்பன் சிலம்பப் போட்டி

128 days ago 19 Nov 2025

Share this story

மதுரை: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் கே.கே.கே, வேர்ல்டு சிலம்பம் சார்பில் சர்வதேச அளவிலான ஓப்பன் சிலம்பப் போட்டி நடந்தது. இந்தியா. இலங்கை, மலேசியா, துபாயைச் சேர்ந்த 800 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் மதுரை ரைசிங் சாம்பியன்ஸ் பயிற்சிகூட மாணவர்கள் 49 பதக்கங்களை வென்றனர்.
வெற்றி பெற்றவர்கள் ஒற்றை கம்பு சப் ஜூனியர் பிரிவில் அர்ஷிதா, பிரக்கியா, அனிஷா, கவிமலர், முதல் பரிசும் யுவன்தானிஷ், சன்விகா, ஆர்யகார்த்திக், தக் ஷன், அமரன் 2ம் பரிசும், அகரன் 3ம் பரிசும் வென்றனர். கேடட் பிரிவில் சர்வேஷ், பத்ரிநாத், அமிழ்தன், ரெகானா முதல் பரிசும், லித்திக் ரோஷன், ஸ்ரீதர் 2ம் பரிசு பெற்றனர். ஜூனியர் பிரிவில் தானிஷ்குமார், ஜெகதீஷ், கனிஷ்கா முதல் பரிசு, ஸ்ரீதர், ருதேஷ் ம் பரிசும் பெற்றனர். சீனியர் பிரிவில் ஸ்ரீருத்ரவேல் முதல் பரிசு, விமலேஷ், ஹர்ஷிகா 2ம் பரிசு, நாகார்ஜூன், அரித்திக்ரோஷன் 3ம் பரிசு வென்றனர்.
இரட்டை கம்பு சப் ஜூனியர் பிரிவில் நேஹாகிறிஸ்டி, கிரிஷ்வைபவ், சியாரித்விகா, கிரித்திக் முதல் பரிசும், சஸ்வந்த 2ம் பரிசும் வென்றனர். கேடட் பிரிவில் பரணிதரன், மாமலைவாசன், குருதர்ஷன் முதல் பரிசும், யோகேஷ் வருண 2ம் பரிசும் பெற்றனர். ஜூனியர் பிரிவில் லேஜ்வந்தன் முதல் பரிசும், காவியவர்மன் 2ம் பரிசும், லேவின் லிதேஷ் 3ம் பரிசும் வென்றனர்.
பெண்கள் ஜூனியர் பிரிவில் ஹர்ஷினி 3ம் பரிசும், இரட்டை கம்பு ஓப்பன் ஆண்கள் பிரிவில் மணிமாறன் முதல் பரிசும் வென்றனர்.

சுருள்வாள் போட்டியில் முத்துகளினன் முதல் பரிசு, பிரத்திஸ் 2ம் பரிசு வென்றனர். தொடுமுறை போட்டி சப் ஜூனியர் பிரிவில் ஸ்ரீஹரிநிஸ்வந் முதல் பரிசு, ஸ்ரீசுக்கிர்தன் 2ம் பரிசு, கேடட் பிரிவில் பிரசன்னா முதல் பரிசு, ஜூனியர் பிரிவில் வெற்றிமாறன்,முதல் பரிசு, அஸ்வின் 2ம் பரிசு, சீனியர் பிரிவில் செந்துாரன் முதல் பரிசு வென்றனர்.

பயிற்சிகூடத் தலைவர்கள் சுந்தரக்கண்ணன், சரவணன், ஜான் சந்திரமோகன், தலைமை பயிற்சியாளர் கவுரிசங்கர், துணைப் பயிற்சியாளர்கள் கார்த்திகேயன், மதன் பாராட்டினர்.

Namma Madurai

Local News & Updates

More News