மேலுார்: மேலுலூரில் போக்குவரத்து போலீஸ் சார்பில் சாலை பாதுகாப்பு விழா நடந்தது.
ஹெல்மெட் அணியும் அவசியத்தை வலியுறுத்தி நடந்த டூவீலர் ஊர்வலத்தை இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார். இதில் போலீசார், வாகனம் பழுது பார்ப்போர் சங்கம், அரசு கல்லுாரி மாணவர்கள், டூ வீலர் டீலர் சங்கத்தினர் முக்கிய வீதிகளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். எஸ்.ஐ.கள் ஜெயபாண்டி, பாலகிருஷ்ணன், ஜெயக்குமார் பங்கேற்றனர்.
அரசு இருபாலர் பள்ளியில் நெடுஞ்சாலை துறை நடத்திய விழாவில் மாணவர்கள் பங்கேற்ற ஊர்வலத்தை ஏ.இ.பாலமுருகன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் துவக்கி வைத்தனர். சாலைப் பாதுகாப்பு குறித்த பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்திச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Namma Madurai
Local News & Updates