Back
LOCAL EVENTS
LOCAL EVENTS
மதுரையில் மணக்க மணக்க பிரியாணி.. 150 ஆடுகள், 300 கோழிகள்.. கோயில் திருவிழாவில் அள்ளி சென்ற பக்தர்கள்
398 days ago
19 Feb 2025
மதுரை: திருமங்கலம் அருகே வடக்கம்பட்டி முனியாண்டி கோவிலில் 150 ஆடுகள், 300 கோழிகள், பலியிட்டு 2500 கிலோ அரிசியில் பிரியாணி சமைத்து, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பாத்திரங்களில் வழங்கப்பட்டது. இந்த பிரியாணி திருவிழாவில் வில்லூர், அகத்தாபட்டி, களிக்குடி உள்ளிட்ட அருகில் உள்ள கிராமத்தினர் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று அன்னதானத்தை வாங்கி சென்றனர். இதேபோன்று இந்த முனியாண்டி கோயிலுக்கு ஆந்திரா, கேரளா, கர்நாடகா மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா என பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் வந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடக்கம்பட்டி என்ற ஊர் உள்ளது. இந்த ஊரில் உள்ள முனியாண்டி கோவிலில் ஆண்டுதோறும் இரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் திருவிழா கொடுப்பது வழக்கம். அதாவது ஒரு சமுதாயத்தினர் தை மாதம் 2வது வெள்ளிக்கிழமையும், இன்னொரு தரப்பினர் மாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமையும் திருவிழா கொடுப்பது வழக்கம்.

Namma Madurai
Local News & Updates