திருப்பரங்குன்றம்: தமிழக அரசு உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 70 வயது பூர்த்தி அடைந்த 25 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, தி.மு.க, வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் பாலாஜி சார்பில் ஒவ்வொரு தம்பதிக்கும் ரூ. 7000 மதிப்புள்ள புத்தாடைகள், காமாட்சி விளக்கு, வேலுடன் கூடிய ஆறுமுக விளக்கு உள்ளிட்ட பொருட்களும், ரொக்கம் ரூ. 2000, பிரசாதமும் வழங்கப்பட்டது. மூத்த தம்பதியினரிடம் அறங்காவலர் குழுவினர், கோயில் பணியாளர்கள், பொதுமக்கள் ஆசீர்வாதம் பெற்றனர். அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணிச்செல்வம், ராமையா, கண்காணிப்பாளர்கள் ரஞ்சனி, சுமதி, பணியாளர்கள் பங்கேற்றனர்.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் 9 மூத்த தம்பதியர் சிறப்பு செய்யும் நிகழ்ச்சியில் அம்மனுக்கு அர்ச்சகர் சண்முகம் சிறப்பு பூஜை செய்தார். அன்ன தானம் வழங்கப்பட்டது. நிர்வாக அலுவலர் இளமதி, ஆய்வாளர் ஜெயலட்சுமி கோயில் பணியாளர்கள் பூபதி, கவிதா, வசந்த், பெருமாள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
திருமங்கலம் மீனாட்சி அம்மன் கோயிலில் 20 தம்பதிகளுக்கு சிறப்பு செய்யப்பட்டது. ஏற்பாடுகளை தக்கார் சுசீலா ராணி, நிர்வாக அதிகாரி அங்கையர்கன்னி, ஆய்வாளர் ராஜலட்சுமி செய்திருந்தனர். பூஜைகளை அர்ச்சகர் சங்கரநாராயண பட்டர் குழுவினர் செய்தனர்.

Namma Madurai
Local News & Updates