Namma Madurai App

Namma Madurai App

உதிரும் பள்ளிச் சுவர் அதிரும் கிராம மக்கள்
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

உதிரும் பள்ளிச் சுவர் அதிரும் கிராம மக்கள்

48 days ago 06 Feb 2026

Share this story

அலங்காநல்லுார் அலங்காநல்லுார் அருகே மணியஞ்சி அரசு உயர்நிலைப் பள்ளிச் சுவரின் சிமென்ட் பூச்சுக்கள் உதிர்ந்து, கற்கள் பெயர்ந்து விழும் அபாயத்தில் உள்ளது.
அப்பகுதி அசோக்ராஜ் கூறியதாவது:
எட்டு ஆண்டுக்கு முன் பள்ளியில் பழுதடைந்த வகுப்பறை ஓட்டுக் கட்டடத்தின் பின் பகுதியை சுற்றுச்சுவரை விட்டுவிட்டு இடித்தனர். பின் இடைவெளி விட்டு புதிய வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது. தற்போது பழமையான வகுப்பறை கட்டட சுவரின் பூச்சுகள் பெயர்ந்து கருங்கற்கள் வெளியே தெரிகின்றன. அவை சரிந்து விழும் நிலை உள்ளது.

மேலும் சுவர்களில் 'மெகா சைஸ்' விரிசல்கள் உள்ளன. பள்ளி முன் கட்டப்பட்ட செங்கல் சுற்று சுவர் விரிசல் ஏற்பட்டு ஆடுகிறது. தேள், பூரான் போன்ற விஷப்பூச்சிகள் உலா வருகின்றன. சுவர்கள் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளதால் தெருவுக்குள் மக்கள் அச்சத்துடன் சென்று வருகிறோம்.

விபரீதம் ஏற்படும் முன் பள்ளிச் சுவரை அகற்றி புதிதாக கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Namma Madurai

Local News & Updates

More News