Namma Madurai App

Namma Madurai App

தென்னிந்திய ஓப்பன் கராத்தே போட்டி
Back SPORTS NEWS
SPORTS NEWS

தென்னிந்திய ஓப்பன் கராத்தே போட்டி

50 days ago 05 Feb 2026

Share this story

மதுரை: ஜி தொக்குக்காய் கராத்தே டூ இந்தியா சார்பில் தென்னிந்திய அளவிலான ஒப்பன் கராத்தே போட்டி ஈரோட்டில் நடந்தது.
இதில் மதுரை கடச்சனேந்தல் ரைசிங் சாம்பியன்ஸ் அகாடமி மாணவர்கள் பதக்கங்களை வென்றனர். சப் ஜூனியர் கட்டா பிரிவில் பவானி, ஆராத்யா, அஹமது, அபினேஷ் முதல் பரிசும், ஹர்தேவ் ராஜன், பர்ஹனா இரண்டாம் பரிசும், எஸ்.பிரஜன் மூன்றாம் பரிசும் வென்றனர். கேடட் பிரிவில் லித்திகா முதல் பரிசும், பி.பிரஜன் இரண்டாம் பரிசும் யோகேஷ். சித்தார்த் மூன்றாம் பரிசும் வென்றனர். ஜூனியர் பிரிவில் சஞ்சய், கார்த்திக் சுகந்த் முதல் பரிசு, தக்ஷின் இரண்டாம் பரிசு வென்றனர். சப் ஜூனியர் சண்டை பிரிவில் சித்தார்த் யாழ்வேந்தன். ஹர்தேவ் ராஜன் முதல் பரிசு, அபினேஷ் மூன்றாம் பரிசு வென்றனர்.
கேடட் சண்டை பிரிவில் லக்ஷிதா முதல் பரிசு, பி.பிரஜன் இரண்டாம் பரிசு, பாரூக் மூன்றாம் பரிசு வென்றனர். ஜூனியர் சண்டை பிரிவில் ஜீவிதா முதல் பரிசு, தர்ஷினி, கவிசந்தோஷ், கார்த்திக் சுகந்த் மூன்றாம் பரிசு வென்றனர். அகாடமி அகில இந்திய தலைவர் தியாகராஜன், பொதுச்செயலாளர் முத்துராஜு, பயிற்சியாளர் கவுரிசங்கர் பாராட்டினர்.

Namma Madurai

Local News & Updates

More News