Back
LOCAL EVENTS
LOCAL EVENTS
சுற்றுலாத்துறை முனைப்பில் வரலாற்றுச் சின்னங்களுக்கு புதிய உயிர் — “இதுதாங்க நம்ம மதுரை”
139 days ago
05 Nov 2025
மதுரையில் கீழமாசி மற்றும் தெற்கு மாசி வீதிகள் சந்திக்கும் இடத்தில் இரும்புத்தூணில் விளக்குகள் ஏற்றப்பட்டதால், அது “விளக்குத்தூண்” என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. மாசி வீதி சந்திப்புகளின் பெருமையாக விளங்கிய இந்த விளக்குத்தூண் தற்போது பராமரிப்பின்றி உள்ளது. தூண்களைச் சுற்றி மரக்கன்றுகள் தானாக முளைத்து வளர்கின்றன.
இங்கிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் “பத்துத்தூண் சந்து” அமைந்துள்ளது. வரிசையாக பத்தடி இடைவெளியில் நீண்ட கல் தூண்கள் இன்றளவும் கம்பீரமாக நிற்கின்றன. ஒவ்வொரு தூணும் ஐந்தடி சுற்றளவில், 50 அடி உயரத்தில் உருண்டை வடிவில் கட்டப்பட்டுள்ளன.
திருமலை நாயக்கர் அரண்மனையின் ஒரு பகுதி “ரங்கவிலாசம்” எனப்படுகிறது. இதில் திருமலை நாயக்கரின் தம்பி முத்தியாலு நாயக்கர் வசித்ததாக கூறப்படுகிறது. அந்த ரங்கவிலாசத்தின் தூண்களே இன்றும் பத்துத்தூண்களாக காணப்படுகின்றன. ரங்கவிலாசத்தின் மற்ற பகுதிகள் தற்போது மறைந்துவிட்டன. இப்போது எஞ்சியுள்ள திருமலை நாயக்கர் அரண்மனை, “மகால்” எனப்படும் சொர்க்கவிலாசமாக திகழ்கிறது. மகாலுக்கு அருகிலேயே பத்துத்தூண்கள் உள்ளன. இவற்றை தொல்லியல் துறை பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக பராமரித்து வருகிறது.

Namma Madurai
Local News & Updates