Back
LOCAL EVENTS
LOCAL EVENTS
மதுரையில் 41 புதிய மினிபஸ் வழித்தடங்களுக்கு அனுமதி: பஸ் சேவை இல்லாத பகுதிகளுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு!
406 days ago
13 Feb 2025
மதுரை: மாட்டுத்தாவணி முன்பாக உள்ள நக்கீரர் நுழைவு தோரண வாயிலை இடித்த போது, நுழைவு தூண் விழுந்து பொக்லைன் ஆபரேட்டர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் நடந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி மதுரை மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள ஆம்னி பேருந்து நிலையம் முன்பாக நக்கீரர் நுழைவு தோரண வாயில் அமைந்துள்ளது. இந்த தோரண வாயில் வழியாக மட்டுமல்லாமல், வாயிலுக்கு இரு புறங்களிலும் உள்ள சாலையோரங்களிலும் வாகனங்கள் முந்தி செல்கின்றன. இதனால் விபத்துகள் அதிகரிப்பதோடு, போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.
இதன் காரணமாக நுழைவு வாயிலை அடுத்த 6 மாதங்களில் அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த செப்டம்பர் மாதத்தில் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தும் வகையில் நேற்று நள்ளிரவு போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாட்டுத்தாவணி நுழைவு வாயில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி பொக்லைன் இயந்திரம் மூலமாக தோரண வாயிலை அடிக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்றன. அப்போது இரு பக்கங்களின் பேஸ்மெண்ட்டை இரு இயந்திரங்கள் மூலமாக இடிக்கும் பணிகள் நடைபெற்றது. பேஸ்மெண்ட் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்த பின், திடீரென தோரண வாயில் அப்படியே கீழே சரிந்து விழுந்தது. எதிர்பாராத வகையில் பொக்லைன் இயந்திரம் மீது தோரண வாயில் விழுந்தது. இதில் சம்பக்குளம் பகுதியைச் சேர்ந்த பொக்லைன் ஆபரேட்டர் நாகலிங்கம் மீது தூண் விழுந்தது. இன்னொரு பக்கம் ஒப்பந்தத்தாரரான சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த நல்லதம்பியும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டார். இதன்பின் உடனடியாக அங்கிருந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போது, பொக்லைன் ஆபரேட்டர் நாகலிங்கம் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தாரரான நாகலிங்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொக்லைன் இயந்திரம் மீது நக்கீரர் நுழைவு தோரண வாயில் சரிந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read more at: https://tamil.oneindia.com/news/madurai/jcb-operator-died-while-demolishing-the-madurai-mattuthavani-arch-in-the-midnight-679657.html

Namma Madurai
Local News & Updates