Namma Madurai App

Namma Madurai App

சர்வீஸ் ரோட்டில் எரிக்கப்படும் கழிவு
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

சர்வீஸ் ரோட்டில் எரிக்கப்படும் கழிவு

29 days ago 26 Feb 2026

Share this story

அலங்காநல்லூர் ஒன்றியம் அய்யங்கோட்டை ஊராட்சியில், வீடுகளில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக், பாலிதீன் குப்பையுடன், கோழி இறைச்சிக் கழிவுகள் இருபுற சர்வீஸ் ரோடு, மயானம், கண்மாய்கரைகளில் கொட்டி எரிக்கப்படுகிறது. இதனால் காற்று மாசுபடுகிறது.
புகை மண்டலத்தால் விபத்து அபாயம் உள்ளது. எரிந்த பிளாஸ்டிக் கழிவுகளில் உணவுதேடும் கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன. நகரி-அய்யங்கோட்டை இடையே சர்வீஸ் ரோடு கண்மாய் கரையில் அதிக குப்பை தேங்கியுள்ளது. இதில் வேன்களில் இருந்து 'செப்டிக் டேங்க்' கழிவுகள் தொடர்ந்து கொட்டப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாகனங்களில் வந்து பிளாஸ்டிக் கழிவுகளை குவித்துச் செல்கின்றனர்.

இவற்றை எரிப்பதால் அப்பகுதியில் ஊராட்சி சார்பில் நடவு செய்த மரக்கன்றுகள் கருகி விட்டன. 'செப்டிக் டேங்க் கழிவு, குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Namma Madurai

Local News & Updates

More News