உசிலம்பட்டி: உத்தப்பநாயக்கனூர் அருகே கல்லுாத்து ஊராட்சி கல்யாணிபட்டியில் சில நாட்களாக குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. கிராமத்தினர் ஊராட்சி நிர்வாகத்தில் முறையிட்டும் தீர்வு கிடைக்காததால் நேற்று மதியம் 1.50 மணியளவில் கல்யாணிபட்டி விலக்கில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் விக்கிரமங்கலம், அணைப்பட்டி ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. போலீஸ் எஸ்.ஐ. முகமது நசீர், கல்லுாத்து ஊராட்சி அலுவலர்கள் விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக சமரசம் செய்தனர்.
Namma Madurai
Local News & Updates