Back
LOCAL EVENTS
LOCAL EVENTS
ரயில்வே சுரங்கப்பாதை மேம்பாலம் அமைக்க கோரிக்கை
28 days ago
24 Feb 2026
மதுரை: திருப்பரங்குன்றம் ரயில்வே ஸ்டேஷன் அருகே சுரங்கப்பாதை, சிந்தாமணி அருகே மேம்பாலம் அமைக்க அத்தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா மத்திய ரயில்வே இணை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்தார்.திருப்பரங்குன்றம் ரயில்வே ஸ்டேஷன் அருகே லெவல் கிராசிங் இருந்த போது பஸ் ஸ்டாண்டில் இருந்து ஹார்விப்பட்டிக்கு பலர் எளிதாக சென்றுவந்தனர். அப்பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டதும் பாதுகாப்பு கருதி ரயில்வே நிர்வாகம் லெவல் கிராசிங்கை மூடியது.
Namma Madurai
Local News & Updates