Namma Madurai App

Namma Madurai App

தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

35 days ago 19 Feb 2026

Share this story

மதுரை: மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த ஐ.டி.ஐ.தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குமார்ச்20 காலை 9:30 முதல் தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் மதுரை மூன்று மாவடியிலுள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில்(அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர் விடுதி வளாகம்) நடைபெற உள்ளது.
அரசு மற்றும் தனியார்துறை முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. நிறுவனங்களுக்கு தேவையான தொழில் பழகுநர்கள் தேர்வு செய்யப்படுவர். மாணவர்கள் ஐ.டி.ஐ. தேர்ச்சி சான்று, பத்தாவது வகுப்பு மதிப்பெண் சான்று, ஜாதிச் சான்று, ஆதார், பாஸ்போர்ட் போட்டோவுடன் பங்கேற்க வேண்டும். தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை ரூ. 7700 முதல் ரூ.8050 வரை வழங்கப்படும். பயிற்சி முடிவில் தேசிய தொழிற்பழகுநர் சான்று வழங்கப்படும். மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனரை "94990 55748" ல் தொடர்பு கொள்ளலாம்.

Namma Madurai

Local News & Updates

More News