Namma Madurai App

Namma Madurai App

வேகமெடுக்குது வண்டியூர் பூங்கா சீரமைப்பு பணி: 2026 ஜனவரியில் மக்களுக்காக திறக்கப்படும்!
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

வேகமெடுக்குது வண்டியூர் பூங்கா சீரமைப்பு பணி: 2026 ஜனவரியில் மக்களுக்காக திறக்கப்படும்!

131 days ago 13 Nov 2025

Share this story

மதுரையில் கடல் இல்லாத குறையை போக்கும் வகையில், 500 ஏக்கரில் பரந்து விரிந்த வண்டியூர் கண்மாய் சுற்றுப்புறத்தில் உள்ள பூங்கா சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமாக மாற உள்ளது. இதற்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

கண்மாயின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் 3 கி.மீ. நீளமான சைக்கிள் பாதை, 3 கி.மீ. நடைப்பயிற்சி பாதை, யோகா மையம், நூலகம், செயற்கை நீரூற்று, குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், திறந்தவெளி ஆம்பிதியேட்டர், உணவகம், ஸ்கேட்டிங் தளம், கராத்தே பயிற்சி மையம், பேட்மிண்டன் மைதானம் போன்ற வசதிகள் அமைக்கப்படுகின்றன.

Namma Madurai

Local News & Updates

More News