Namma Madurai App

Namma Madurai App

சமுதாய நல்லிணக்கம் வீட்டில் இருந்து துவங்க வேண்டும் ஆர்.எஸ்.எஸ், பொதுச் செயலாளர் அறிவுரை
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

சமுதாய நல்லிணக்கம் வீட்டில் இருந்து துவங்க வேண்டும் ஆர்.எஸ்.எஸ், பொதுச் செயலாளர் அறிவுரை

50 days ago 05 Feb 2026

Share this story

மதுரை: "சமுதாய நல்லிணக்கம் வீட்டில் இருந்து துவங்க வேண்டும்" எனஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே அறிவுறுத்தினார்.
மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் ஆர்.எஸ்.எஸ்.,சின் நூற்றாண்டு பயணம், புதிய பாதைகள் என்ற பெயரில் பிரமுகர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது. நகர் தலைவர் மங்கள முருகன் வரவேற்றார். இதில் தத்தாத்ரேயா ஹொசபலே பேசியதாவது.
ஹிந்து கூட்டுக் குடும்ப முறையை பின்பற்றுவதன் மூலம் குடும்ப ஒற்றுமை மேம்படும்.சமுதாய நல்லிணக்கத்தை நமது வீட்டிலிருந்து துவங்க வேண்டும். சுற்றுச் சூழலை பாதுகாக்க அடுத்த தலைமுறைக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டும். நாட்டின் பாரம்பரியம் கலாசாரத்தை சுதேசிய சிந்தனை மூலம் வளர்க்க வேண்டும். அரசியலமைப்பு சட்டம் வகுத்துள்ள சட்டதிட்டங்களை நாம் கடைபிடிக்க வேண்டும். இந்த 5 மாற்றங்களும் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படும்என்றார்.

தென் பாரத தலைவர் வன்னியராஜன், தென் தமிழக தலைவர் ஆடலரசன், மதுரை கோட்ட தலைவர் சிவலிங்கம் பங்கேற்றனர்.

Namma Madurai

Local News & Updates

More News