Back
LOCAL EVENTS
LOCAL EVENTS
காற்று மாசுபடுவதை தவிர்க்கவே நவீன மின்மயானம்
105 days ago
07 Feb 2026
மதுரை: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே குச்சனுாரில் மின்மயானம் அமைக்க தடை கோரிய தில். காற்று மாசுபடுவதை தவிர்க்க அரசு நவீன மயானம்" அமைக்கிறது. இதை தடுக்கும் உள்நோக்குடன் தாக்கல் செய்த பொதுநல மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
குச்சனுார் கதிரேசன் தாக்கல் செய்த பொதுநல மனு குச்சனுாரில் குறிப்பிட்ட சர்வே எண்ணிலுள்ள நிலத்தில் மின்மயானம் அமைக்கும் திட்டத்தை கைவிடுமாறு கலெக்டருக்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் ஜி.ஜெயச் சந்திரன், என்.செந்தில் குமார் அமர்வு விசாரிந்தது.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தற்போதுள்ள மயானத்தை நவீனமயமாக்குவதற்கு பதிலாக தென்மேற்கு மூலையில் மின்மயானம் அமைக்க சம்பந்தப்பட்ட நிலத்தை தேர்வு செய்துள்ள னர். அந்த இடம் சனீஸ்வர பகவான் கோயிலுக்கு அருகில் உள்ளது. இறந்த உடல்களை புதைக்கும் வழக்கம் பின்பற்றப்பட்டு வரும் நிலையில், மின்மயானம் அமைப்பது அங்கு நிலவும் மரபு மற்றும் வழக்கத்திற்கு எதிரானது. அரசு பிளீடர் திலக்குமார் தேசிய பசுமைத் தீர்ப்பாய வழிகாட்டுதல்களின்படி, மின்மயானம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. நவீன மின்மயான வசதியை மற்ற கிராம மக்கள் பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கில் இம்மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு காற்று மாசுபடுவதை தவிர்க்க அரசு நவீன மயானத்தை அமைக்கிறது. இதை தடுக்கும் மறைமுக உள்நோக்குடன் இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில் எந்த தகுதியும் இல்லை. இதை விசாரிக்க விரும்பவில்லை. தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனர்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு காற்று மாசுபடுவதை தவிர்க்க அரசு நவீன மயானத்தை அமைக்கிறது. இதை தடுக்கும் மறைமுக உள்நோக்குடன் இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில் எந்த தகுதியும் இல்லை. இதை விசாரிக்க விரும்பவில்லை. தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனர்.
Namma Madurai
Local News & Updates