வாடிப்பட்டி: மத்திய அரசின் ஆய்வில் மோசமான நகரங்களில் மதுரை 40வது இடம் பெற்றது. இதில் குறிப்பாக மேற்கு ஒன்றிய பகுதி கிராமப்புறங்களில் பொது சுகாதாரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாகவும், குப்பையை முறையற்ற முறையில் அகற்றுவது, பல்வேறு நோய்கள் பரவுவதற்கான காரணமாக இருந்தது.
பரவை ஜி.எச்.சி.எல், அறக்கட்டளை சார்பில் கிராம ஊராட்சிகளில் சுற்றுச்சூழலுக்கு, பாதுகாப்பிற்கு ஏற்றபடி 40 குப்பை தொட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி சமயநல்லுார் ஊராட்சி அலுவலகத்தில் நடந்தது.
ஊராட்சிகளின் மாவட்ட உதவி இயக்குனர் விசாலாட்சி தலைமை வகித்தார். திட்ட அலுவலர் ஹேமலதா முன்னிலை வகித்தார்.
ஊராட்சிகளின் மாவட்ட உதவி இயக்குனர் விசாலாட்சி தலைமை வகித்தார். திட்ட அலுவலர் ஹேமலதா முன்னிலை வகித்தார்.
பி.டி.ஓ., லட்சுமிகாந்தம் வரவேற்றார். அறக்கட்டளை சமூகப் பொறுப்பு மற்றும் நிதி அலுவலர் சுஜின் தர்மராஜ் சூழல் பாதுகாப்பு வடிவியமைப்பிலான 40 குப்பை தொட்டிகளை வழங்கினார்.
பேரூராட்சி பி.டி.ஓ., பிரேமா பெற்றுக்கொண்டார்.
மேற்கு ஒன்றியத்தில் உள்ள சமயநல்லுார், தேனுார், அதலை, பொதும்பு, கோவில்பாப்பாகுடி, வாகைகுளம், பேச்சிகுளம் ஊராட்சிகளுக்கு பகிர்ந்து வழங்கப்படுகிறது. ஊராட்சி செயலர்கள், துாய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.

Namma Madurai
Local News & Updates